ஏப்ரல் 26 உள்ளாட்சித் தேர்தல்?

உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் இறுதிவாரத்தில் நடைபெறவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பெரும்பாலும் ஏப்ரல் 26 ஆம் திகதியை தேர்தல் தினமாக அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு பரிசீலித்துவருகின்றது என தெரியவருகின்றது.

உள்ளாட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.

இன்று மாலையே குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சபையில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை சபாநாயகர் நாளை சான்றுதிரைப்படுத்திய பின்னர் சட்டம் அமுலுக்குவரும்.

14 நாட்களுக்கு பிறகு வேட்பு மனு தாக்கலுக்குரிய அறிவித்தல் வெளியாகும் என தெரியவருகின்றது.
அதேவேளை, உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தலை ஏப்ரல் நடுப்பகுதியில் வெளியிடுமாறு எதிரணிகள், தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles