ஏவுகணை தாக்குதலால் ஈரான் – பாகிஸ்தானுக்கிடையில் இராஜதந்திர போர்!

பாகிஸ்தான்மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர மோதல் வெடித்துள்ளது.

அத்துடன், ஈரானில் உள்ள தமது நாட்டு தூதுவரை பாகிஸ்தான் மீள அழைத்துள்ளது.

” ஈரானில் உள்ள எமது தூதுவரை திரும்பப் பெற்றுக்கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கான ஈரான் தூதுவர் தற்போது அவரது நாட்டுக்கு சென்றுள்ளார். தற்போதைக்கு அவர் பாகிஸ்தானுக்கு வர மாட்டார்” என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) என்ற தீவிரவாத அமைப்பை குறிவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.

சன்னி இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த இந்த அமைப்பு, ஈரானின் சிஸ்டன் பலுசிஸ்தான் மாகாணத்தில் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருவதாக ஈரான் குற்றம் சாட்டி உள்ளது. குறிப்பாக, காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து ஜெய்ஷ் அல்-அட்ல் தாக்குதல் நடத்துவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அந்த அமைப்பை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு , “பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மூன்று சிறுமிகள் காயமடைந்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

தீவிரவாதம் பொதுவான அச்சுறுத்தல் என பாகிஸ்தான் சொல்லி வருகிறது. அதைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. இந்த மாதிரியான தாக்குதல்கள் அண்டை நாடுகளில் நம்பிக்கையை பாழாக்கும். தூதரக ரீதியாக பிரச்சினையை அணுக பல்வேறு வாய்ப்புகள் உள்ளபோது, ஈரான் தேர்ந்தெடுத்த வழி மிகவும் தவறானது” என குறிப்பிட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles