ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் கலந்து கொள்ள ஜோகோவிச் திட்டம்

துபாயில் நடக்கும் ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் கலந்து கொள்ள நோவக் ஜோகோவிச் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டென்னிஸ் விளையாட்டின் ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பிய நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச். இவர், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில், ஜோகோவிச் அடுத்து வரும் போட்டிகளில் விளையாட ஆயத்தமாகியுள்ளார். அடுத்த மாதம் துபாயில் நடக்கும் ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் கலந்து கொள்ள ஜோகோவிச் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Related Articles

Latest Articles