ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்?

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை தான் இராஜினாமா செய்வதாக அக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா அறிவித்துள்ள நிலையில், புதிய தவிசாளர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராகக் களமிறங்குவதற்குரிய கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள நிலையிலேயே பொன்சேகா தவிசாளர் பதவியையும், ஐக்கிய மக்கள் சக்தியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியையும் துறந்துள்ளார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles