அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் வந்தால் அவரை வரவேற்பதற்கு தயார். அவர் எமது பக்கம் வருவதை நானும் விரும்புகின்றேன் – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற “ஊழல் மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் உட்பட அதிகாரிகளை நீக்குதல்” எனும் தலைப்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியன ஒன்றிணைந்து கொண்டுவரும் பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு தெரிவித்தார்.
” ரொஷான் ரணசிங்க பணத்துக்கு அடிபணியும் நபர் கிடையாது. அவர் கள்ளன் அல்ல என்பது எனக்கு தெரியும். அவர்போன்றவர்கள்தான் எமக்கு தேவை.” – எனவும் சஜித் குறிப்பிட்டார்.
