“ ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நிச்சயம் சிறு தோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் உறுதியளித்துள்ளார்.
ஹேவாஹெட்ட நகரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ நாட்டு மக்கள் எமக்கு நிச்சயம் ஆதரவு வழங்குவார்கள், எமது ஆட்சியின்கீழ் கொள்ளையர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.” எனவும் சஜித் சூளுரைத்தார்.
“ நாட்டை வங்குரோத்தாக்கிய திருடர்களும், திருடர்களை பாதுகாக்கும் ஜனாதிபதியும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவர். இவர்களுக்கு உரிய பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் அமைச்சர்களுக்கு சலுகைகள் வழங்கப்படமாட்டாது.” – எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.










