ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற ஐதேகவின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இது தொடர்பான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயல்பட்ட நவீன் திஸாநாயக்க, அப்பதவியில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையிலேயே புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
