ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் பொது சின்னத்தின்கீழ் ஒன்றிணைந்தால் எவ்வித சிக்கலும் வராது என்று முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொது கூட்டணியின்கீழ் ஐக்கிய மக்கள் சக்திக்கு கூடுதல் ஒதுக்கீடுகளை வழங்க முடியும் எனவும், இரு தரப்பும் இணங்கக்கூடிய செயலாளர் ஒருவரை நியமித்தால் முன்னோக்கி பயணிக்கலாம் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இரு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் பணிகளை பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.










