ஐதேக, சஜித் அணி இணைந்தால் அரசுக்கு பெரும் சவால்!

உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிட்டால் அது அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்பது பற்றி பேச்சுகள் இடம்பெறுகின்றன. எனவே, உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஒரே சின்னத்தின்கீழ், ஒரே பட்டியலில் போட்டியிட்டால் அது அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். அவ்வாறு நடக்க வேண்டும்.

இரு கட்சிகளும் ஒரு இடத்துக்கு வந்து தேர்தலில் பொது பட்டியலை தயாரிக்க வேண்டும். சில தொகுதிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி, சில தொகுதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை நிறுத்தலாம். ஐக்கிய மக்கள் சக்திக்கு கூடுதலாக இடமளிக்க வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles