ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை தோட்ட தீ விபத்து சம்பவத்துக்கு ஒருவருட பூர்த்தி

முழு மலையக மக்களையும் கலங்க வைத்த இராகலை முதலாம் பிரிவு தோட்டம் மத்தியப் பிரிவில் இடம்பெற்ற தனிவீட்டு தீ விபத்து சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் 07.10.2021 இரவு 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்து இன்றும்

இராகலை தோட்டம் மக்களை மட்டுமின்றி அனைத்து மனித மனங்களையும் விட்டு நீங்காத சம்பவமாக இடம்பிடித்துள்ளது.

மண் சுவராலும்,பொலித்தின் ரெட்டுகளாலும்,மறைக்கப்பட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வீடே தீ பிடித்து சாம்பலானது .

இச்சம்பவத்தில் ஐந்து உயிர்கள் சத்தமில்லாமல் எரிந்து கருகியது.

இச்சம்பவத்தின் போது இவ்வீட்டில் வசித்த (27)வயதுடைய தங்கையா இரவீந்திரன் என்பவர் மாத்திரம் வீட்டுக்கு வெளியே மதுபோதையில் இருந்தமையால் உயிர் தப்பியிருந்தார். ஆனால் வீட்டுக்குள்ளே இருந்த தந்தை,தாய்,மகள்,மற்றும் ஒருவயது மற்றும் 12 வயதுடைய பேரப்பிள்ளைகள் இருவர் என ஐவர் தீயில் கருகி உயிரிழந்திருந்தனர். இராமையா தங்கையா (வயது 61) முழுமையாக எரிந்து வீட்டின் முதல் அறையில் உயிரிழந்தார்.

அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57), நதியா வயது (34), துவாரகன் (13), மற்றும் ஹெரோசன் (வயது 01) ஆகியோர் வீட்டின் பின் அறையில் ஒரே இடத்தில் தீ பிடித்த நிலையில் ஒருவர் மீது ஒருவராக உயிரிழந்திருந்தனர்.

அதேநேரத்தில் சம்பவத்தில் உயிரிழந்த தங்கையா மற்றும் லெட்சுமிக்கு பிறந்த இரவீந்திரன் வயது (27) என்பவரே உயிர் தப்பியுள்ளவராவார். இவரே தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles