நுவரெலியா, ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட கபரகல தோட்டத்தின் லயன் குடியிருப்பு ஒன்றிம் மீது ஐந்து நாட்களுக்கு முன் மின்சார கம்பம் விழுந்துள்ளது. அது இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

தொடர்ந்தும் மின்சாரம் பாயும் இந்த மின்கம்பம் தொடர்பில் பலருக்கு இத்தோட்ட மக்கள் அறிவித்தும் இன்னமும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த மின்சார வயர்களில் மின்சாரம் தொடந்து பாய்வதால் அபாய நிலையில் காணப்படுகிற இந்த லயன் குடியிருப்பு மக்கள் மிகுத்த அச்சத்துடன் நாளை கடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கபடாமல் இருப்பதாலும் கம்பம் அகற்றப்படாமல் இருப்பதாலும் தொடரும் மழையுடன் கூடிய கால நிலையில் பாரியதொரு அபாயம் ஏற்படும் முன்னர் இந்த விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனவத்திற்கொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்படுமாரு தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பதிவு – கேஜி
தவவல் : மூர்த்தி கபரகல
