ஐரோப்பா சந்தையை குறிவைக்கிறது இலங்கை: நாளை ஜேர்மன் பறக்கிறார் அநுர!

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (11) ஜேர்மனி நோக்கி பயணமாகின்றார்.

ஜேர்மனியால் விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அழைப்பையேற்று அங்கு செல்லும் ஜனாதிபதி அநுர, ஜேர்மன் ஜனாதிபதி, வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அந்நாட்டில் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கிடையில் இரு தரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. ஜேர்மன் முதலீடுகளை இலங்கைக்கு பெறுவது சம்பந்தமாகவும், ஆடை ஏற்றுமதி பற்றியும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்காவில் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பா சந்தையை இலங்கை இலக்கு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட குழுவினரும் ஜேர்மன் செல்கின்றனர்.

13 ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles