ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யபடுவோருக்கு மரண தண்டனை?

நாட்டில் இன்று முதல் 5 கிராமுக்கு அதிக ஐஸ் போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய சட்டம் அமுலுக்கு வருகிறது.

அபாயகர ஒளடதங்கள் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

புதிய சட்டத்தின் கீழ் இன்று முதல் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருளை கொண்டு வருதல், வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்தல் தொடர்பில் காலத்தின் தேவைக்கு ஏற்ப சட்டங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles