ஐஸ் போதைப்பொருளுடன் சிறைச்சாலை அதிகாரி கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நிவித்திகல பொலிஸாரால் இன்று (8) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான கபில பிரேமதாசவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இரத்தினபுரி – கலவானை பிரதான வீதியில் உள்ள கெடனிவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் சந்தேக நபர் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் பணிபுரியும் சிறைச்சாலை அதிகாரி ஆவார்.

இந்நிலையிலி, சந்தேக நபரிடமிருந்து 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருபவர் என பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles