வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படை யினரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை விற்று வருகிறார் என மடுக்கந்தை பகுதியில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப் படையினருக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரப் பகுதி நோக்கி ஐஸ் போதைப் பொருளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த சமயம் வைரவபுளியங்குளம், ரயில் நிலைய வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் அந்தப் பெண்ணை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டது. அந்தப் பெண்ணை விசேட அதிரடிப் படையினர் கைது செய்து வவுனியா பொலி ஸாரிடம் ஒப்படைத்தனர்.
அந்தப் பெண்ணிடம் இருந்து 920 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார். மேலதிக விசாரணைக ளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நட வடிக்கை எடுத்துள்ளனர்.
