ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கம்பளை ஜோடி நாவலப்பிட்டியவில் கைது!

மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதியினர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ஈசி கேஸ் முறைமையில் பயணத்தை பெற்றுக்கொண்டு கம்பளை, நாவலப்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளுக்கு இத்தம்பதி போதைப்பொருள் விநியோகம் செய்கின்றது என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய நாவலப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், நாவலப்பிட்டிய – தொலஸ்பாகை வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அருகில் ஐஸ் பக்கெட்டை வைக்க முயன்றவேளை சந்தேக நபர்களை கைது செய்தனர்.

அவர்களை பரிசோசித்தபோது 52 ஐஸ் பக்கெட்டுகள் மீட்கப்பட்டன. ஒரு பக்கெட் ஐஸ் போதைப்பொருள் 7 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 23 மற்றும் 27 வயதுடைய தம்பதியினர் கம்பளை, கீரபனை பகுதியை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.

டுபாய் தாரு என்ற போதைப்பொருள் வியாபாரியிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியே இவர்கள் ஈஸிகேஸ் முறையில் விற்றுவந்துள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

தெய்வீகராஜா

Related Articles

Latest Articles