ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது விசேட சம்மேளனம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதன்போது கட்சிக்கான புதிய யாப்பு முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
“நாட்டில் உள்ள சிஸ்டம் மாற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தின்போதும் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கமையவே கட்சி யாப்பு எதிர்காலத்துக்கு ஏற்றவகையில் மாற்றப்பட்டுள்ளது.
சம்மேளனத்தில் 24 ஆயிரம் பேரை பங்கேற்கவைக்க திட்டமிட்டோம். எனினும், சீரற்ற காலநிலையால் பொதுவெளியில் மாநாட்டை நடத்தாமல் இருக்க முடிவெடுக்கப்பட்டது. எனவே, பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.” – என்றார்.
