ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி உரையாற்ற அனுமதி

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் 101 நாடுகளின் ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்டது.

193 நாடுகளை கொண்ட சபையில், 101 நாடுகள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஆதரவாக வாக்களித்தன.

பெலாரஸ், கியூபா, எரித்திரியா, ரஷ்யா மற்றும் சிரியா உட்பட ஏழு நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. 19 நாடுகள் வாக்களிக்கவில்லை. தீர்மானத்துக்கு ஆதரவாக 101 வாக்குகள் கிடைத்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா.பொதுச் சபையில் உலகத் தலைவர்களின் வருடாந்த கூட்டம் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அனுமதிக்குமாறு ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பான ஒரு முன்மொழிவை 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நேற்று வெள்ளிக்கிழமை பரிசீலனை செய்தது. போர் காரணமாக ஜெலென்ஸ்கி பொதுச் சபைக் கூட்டங்களில் நேரில் பங்கேற்க முடியாது என்று உக்ரைன் விவகாரங்களுக்கான ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.

ஆனால் உக்ரைனால் உருவாக்கப்பட்ட இந்த உத்தேச முன்மொழிவு முடிவின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ரஷ்யா அழைப்பு விடுத்தது.

வீடியோ மூலம் ஜெலென்ஸ்கியை பேச அனுமதிப்பதை ரஷ்யா எதிர்க்கிறது என இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐ.நாவுக்கான ரஷ்ய தூதர் வசிலி நெபென்சியா தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று ஐ.நா சபை கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 101 நாடுகள் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து 21ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வில் உலகத் தலைவர்கள் மத்தியில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உரையாற்றவுள்ளார்.

Related Articles

Latest Articles