பிரதமர் ஹரணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஒக்டோபரில் சீனா செல்லவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 76 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீன தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் சார்பில் சீனாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
1949ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசை ஏற்றுக் கொண்ட பிரதான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அன்றிலிருந்து தொடரும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒக்டோபரில் பீஜிங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளார். அதேபோன்று சீனாவின் ‘ஒரு சீன’ கொள்கையையும் எமது வெளிநாட்டு;க் கொள்கைளின் ஊடாக ஸ்திரமாக ஏற்றுக் கொள்கின்றோம்’ என்றார்.
