இம்மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என்ற தகவலில் உண்மை இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஜனவரி மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.










