ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகளில் பணிபுரியும் ஊழியர்கள் கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றிருப்பது கட்டாயமாகும் என்று அமைப்பின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க கூறினார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படுகின்ற எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து, வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட பேருந்துகளின் செயல்பாடு குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு தம்புள்ளையில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி, பேருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளதுடன், பஸ் நடத்துனரே அதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும். ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைய மாத்திரமே பயணிகள் பயணிக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறைகளில் பணி புரிகின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்துடன், கூடுதலான கட்டணம் அறவிடக் கூடாது. பேருந்துகளில் யாசகம் பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் இந்த புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பேருந்தில் வெற்றிலை மெல்லுதல் மற்றும் புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. அதன் முழுப் பொறுப்பும் நடத்துனருக்கே உள்ளது. இந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கண்காணிப்பதில் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பரிசோதகர்கள் நாடுபூராகவும் சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், கொவிட் தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களைக் கருத்தி கொண்டு, அவர்களுக்காக போக்குவரத்து அமைச்சினால் ரூ .50,000 பெறுமதியுள்ள வருடாந்த நிவாரண பொதி பேக்கேஜ் முறையொன்று அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் பேருந்துகளும் சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக நடைமுறைப்படுத்தி போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles