ஒக்டோபர் 15 இற்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்புமா?

எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் இலக்குடன் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டிவருகின்றது. அத்துடன் 18 – 30 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படும் – என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இவ்வருடத்துக்குள் தடுப்பூசி பெற்றுக்கொடுப்பதே எமது ஆரம்ப திட்டமிடலாக இருந்தது. எனினும், ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் இந்த இலக்கை அடைவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி எமக்கு பணிப்புரை விடுத்தார். தற்போதைய நிலைவரப்படி அந்த இலக்கை அடையக்கூடிய மட்டத்திலேயே நாம் இருக்கின்றோம்.

ஆகஸ்ட் 31 ஆம் திகதி இலக்கை அடைந்தால், ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் ஏதேனும் விதத்தில் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டும். பாடசாலைகள் திறக்கப்படவேண்டும். ஒக்டோபர் 15 என்பது எமது ஒரு இலக்குதான். ஏனெனில் 18-30 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றவேண்டும். அதேபோல 12-18 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கான திட்டமும் உள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles