ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு பிறகு மாற்றம் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர், இது தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி இறுதி முடிவை எடுக்கவுள்ளார்.
அமைச்சர்கள் சிலரின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்திகள் உருவாகியுள்ள நிலையிலேயே இந்த மாற்றம் இடம்பெறவுள்ளது.