ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளது. சுமார் ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹவுரா – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியன விபத்தில் சிக்கி பயணிகள் ரயில்கள் ஆகும். விபத்து நடந்த இடத்தில் இன்னும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. இதனால், அந்த மார்க்கத்தில் செல்லும் சென்னை – ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒடிஷாமாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா, இந்த ரயில் விபத்தில் 233 பேர் உயிரிழந்ததை தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக உறுதி செய்துள்ளார்.
விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்றுள்ளார். அத்துடன், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.










