நிருபர் – ராமு தனராஜா
ஹப்புதளை, பெரகல வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் இன்றிரவு (22) ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்தவர் விடுதி உரிமையாளர் எனவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தின் பின்புலம் தொடர்பில் இன்னும் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பிலும் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின்பேரில் ஹபுத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

