எல்பிட்டிய பெருந்தோட்ட யாக்கத்துக்கு உரித்தான பேர்லன்ஸ், கய்ப்புக்கலை மற்றும் ஹேரோ ஆகிய தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள், கடந்த மாதம் 70 ஆயிரம் ரூபா முதல் ஒ ரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாவரை சம்பளம் பெற்றுள்ளனர்.
கடந்த மாதம் அவர்கள் செய்த வேலை நாட்களுக்குரிய சம்பளம் இம்மாதம் வழங்கப்பட்டது.
இவ் விடயம் தொடர்பில் தோட்ட முகாமையாளர் டிலூக்சன் கருத்து தெரிவிக்கையில்,
“ இது எனக்கு மிகவும் சந்தோசமான தருணம் மேலும் அதிகமான அளவு இம்மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். இச் சந்தோசமா ன நேரத்தில் இவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கூடிய விரைவில் இடம் பெறும் என்பதையும் மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.
எமது தோட்டத்தில் பணி புரியும் மக்களுக்கும், உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கௌசல்யா