ஓயவில்லை விலை உயர்வு படலம்! எரிபொருள் விலைகளும் எகிறியது!!

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்கூட தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுவரும் நிலையில், உடன் அமுலுக்கு வரும்வகையில் எரிபொருள் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 20 ரூபாவாலும், 95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 23 ரூபாவாலும் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவாலும்,

177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன் விலை 157 ரூபாவிலிருந்து 20 ரூபாவினால் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 15 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைகள் வருமாறு,

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் – 177 ரூபா
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் – 207 ரூபா
ஒட்டோ டீசல் – 121 ரூபா
சுப்பர் டீசல் -159 ரூபா
மண்ணெண்ணெய் – 87 ரூபாவாக

எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் பஸ், ஆட்டோ உட்பட மேலும் பல கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

Related Articles

Latest Articles