முன்னாள் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூலா உட்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாப்பரசர் 16-ம் பெனடிக்டின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வைக்கப்படுகிறது. அதை தொடர்ந்து வருகிற 5 ஆம் திகதி அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.