-ராமு தனராஜா
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டைனாவத்தைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பசறை பொலிஸாருக்கு டைனாவத்தைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவதாக இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து டைனாவத்தைப் பகுதிக்கு விரைந்த பசறை பொலிஸார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவதாக சந்தேகித்த இடத்தை சுற்றிவளைத்தனர்.
இதன்போது சுமார் 200 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதோடு 32 வயதுடைய டைனாவத்தைப் பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இவர் மீது வழக்கு தாக்கல் செய்ய பசறை பொலிஸார் தயாராகி வருகின்றனர்.
இதேவேளை, ஊரடங்கு அமுலில் உள்ள போது முச்சக்கர வண்டியில் மதுபான போத்தல்களை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மடூல்சீமை நகரிலிருந்து விராளிபத்தனை பகுதியை நோக்கி பயணித்தபோது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
25 மதுபான கால் போத்தல்களை இவர் எடுத்துச் சென்றுள்ளதாகவும், போத்தல்களும், முச்சக்கர வண்டியையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
19 வயது இளைஞர் ஒருவரே சந்தேகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய மடூல்சீமை பொலிசார் தயாராகி வருகின்றனர்.