யாழ்ப்பாணத்தில் இருந்து டிப்பர் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்தி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி பூநகரி பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தினை சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் பொலிஸார் வழிமறித்து சோதனையிட்டனர்.
அதன் போது , டிப்பர் வாகனத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ 485 கிராம் கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர்.
அதனை அடுத்து டிப்பர் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனம் , மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.