கற்பிட்டி, பத்தலன்கடுவ தீவுக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் 11 கிலோ 300 கிராம் தங்கத்தைக் கடத்திச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக் கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பத்தலங்குண்டுவ பகுதிக்கு அண்மையில் உள்ள கடற்பரப்பில் வைத்து இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சந்தேகநபர்கள் மூவரும் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
