“ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீள கட்டியெழுப்பும் பயணத்தின்போது கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும்.” – என்று தேசிய அமைப்பாளர் , நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று பதுளையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே சாமர எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
“ தேசிய அமைப்பாளர் பதவியென்பது சவாலான விடயமாகும். இப்பதவியை வகித்துக்கொண்டு முன்னோக்கி செல்கையில் கட்சிக்காக வேலை செய்யக்கூடியவர்களுடன்தான் இணைந்து செல்ல முடியும்.
புகழுக்காக பதவிகளை வைத்திருப்பவர்களுடன் பயணிக்க முடியாது. எனவே, கடுமையான சில முடிவுகளை எடுக்க நேரிடும்.
அவ்வாறு முடிவுகளை எடுக்கும்போது தவறாக நினைக்க வேண்டாம் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கனவுடன் எவரும் செயல்பட முடியாது. சுதந்திரக்கட்சியுடன் இணைந்து செயல்படுமாறு கட்சியைவிட்டு சென்றவர்களையும் அழைக்கின்றேன்.” – என்றார்.










