” கொழும்பில் உள்ள சிசிரிவி கமரா கட்டமைப்பு மூலம் போக்குவரத்து கண்காணிப்பு இடம்பெறும். போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான அபராத சீட்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அத்துடன், அவர்கள் இழைத்த போக்குவரத்து விதிமீறல் குறித்த காணொளியும் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.”
இவ்வாறு பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
ஜனவரி 22 ஆம் திகதி முதல் சிசிரிவி கமரா கட்டமைப்புமூலம் போக்குவரத்து கண்காணிப்பு இடம்பெறும் எனவும் அவர் அறிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பதில் பொலிஸ்மா அதிபர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
கொழும்புக்கு வந்து அபராதத்தை செலுத்துவதைவிட, அவர்கள் உள்ள பகுதிகளிலேயே அதனை செலுத்துவதற்குரிய ஏற்பாடும் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.
