உள்ளாட்சிசபைத் தேர்தலில் கதிரை சின்னத்தின்கீழ் இடதுசாரி கூட்டணியாக களமிறங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி திட்டமிட்டுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் சிலிண்டர் கூட்டணியின்கீழ் சுசுதந்திரக் கட்சியின் நிமல்சிறிபால டி சில்வா அணி போட்டியிட்டது.
சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாடு தமது அணியின்கீழ்தான் உள்ளது என நிமல் சிறிபால டி சில்வா அணியினர் அறிவித்துவருகின்றனர்.
மக்கள் கூட்டணியின் கதிரை சின்னமும் இவர்கள் வசம்தான் உள்ளது.
சுதந்திரக் கட்சியின் கை சின்னம் தொடர்பில் வழக்கு விசாரணை இடம்பெறுவதால்தான் கதிரை சின்னத்தில் களமிறங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்குரிய வேட்பு மனுக்கள் புதிதாக கோரப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்குரிய வேட்பு மனுக்கள் புதிதாக கோரப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.