கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பியோடியவர்களில் 104 பேர் கைது!

வெலிகந்த, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளுள் 104 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மாயமாகியுள்ள 37 கைதிகளை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து கைதிகள் சிலர் நேற்று தப்பியோடியதை அடுத்து, தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

 

Related Articles

Latest Articles