கனடா பறந்தார் சிறீதரன் எம்.பி.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று கனடாவுக்குப் பயணமாகியுள்ளார்.

கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப்பை சந்தித்து அவர் உரையாடவுள்ளார்.

இந்தச் சந்திப்பு கனடாவின் – ஒட்டோவாவில் உள்ள வெளி விவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகப் பேசப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய பிரதி அமைச்சருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள சிறீதரன் எம்.பி. அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles