கனடா பிரதமர் ட்ரூடோவை ஆளுநர் என மீண்டும் விளித்துள்ள ட்ரம்ப், அதிகாரத்தில் நீடிக்க அவர் வர்த்தகப் போரை பயன்படுத்த முயற்சிக்கிறார் எனவும் குற்றஞ்சாட்டினார்.
‘ இறக்குமதி வரி உயர்வு பற்றி என்ன செய்யலாம் என்று கேட்க என்னை ட்ரூடோ தொலைபேசியில் அழைத்தார். இதன்போது கனடா மற்றும் மெக்சிகோ எல்லைகள் வழியாக வந்த போதைப்பொருள் காரணமாக பலர் இறந்துள்ளனர் என்று நான் அவரிடம் கூறினேன்.” எனவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ட்ரூடோ அதிகாரத்தில் நீடிக்க வர்த்தகப் போரை பயன்படுத்த முயற்சிக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். ட்ரூடோவுக்கு வாழ்த்துக்கள்.” எனவும் ட்ரம்ப் கூறினார்.
தனது அண்டை நாடான கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு, 25 சதவீத வரியை விதிக்கும் உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருள்களுக்கு கனடாவும் வரி விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே கனடா பிரதமரை, தன் அறிக்கைகளில் கனடா ஆளுநர் என்று டிரம்ப் கிண்டல் செய்து குறிப்பிடுவது தொடர்ந்து நடக்கிறது.