‘பீடி’ கம்பனியொன்றின் பெயரைப் பயன்படுத்தி மிகவும் சூட்சுமமான முறையில் பீடிகளை தயாரித்து விற்பனை செய்துவரும் நிலையத்தை கம்பளை கலால் திணைக்கள அதிகாரிகள் இன்று (30) சுற்றிவளைத்தனர்.
இதன்போது விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான பீடிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன், இருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
கம்பளை , கம்பளவத்தை பகுதியில் இயங்கிவந்த மேற்டி சட்ட விரோத பீடி தயாரிப்பு நிலையத்தின் பிரதான பங்குத்தாரர் மாத்தளை, நாவுல பகுதியைச் சேர்ந்தவரெனவும் , இவர்களால் தயாரிக்கப்பட்ட பீடிகள் நாட்டில் பல பாகங்களுக்கும் விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைககளை மேற்கொள்ள கலால் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.
கம்பளை நிருபர்










