கம்பளையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

கம்பளை, தொலுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட மில்லகாமுல – கோணட்டுவல கிராமத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. பீசீஆர் பரிசோதனைமூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அம்மூவரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

மேற்படி கிராமத்தில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் கிராமம் நேற்று முதல் முடக்கப்பட்டது.

குறித்த கிராமத்தில் 425 குடும்பங்கள் வாழ்கின்றன, இதில் 35 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா, வெயாங்கொட பகுதியிலுள்ள விகாரையொன்றில் தொழில்செய்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி இருவர் மேற்படி கிராமத்திலுள்ள தமது வீடுகளுக்கு வந்துள்ளனர்.

இவ்விருவரிடமும் கடந்த 16 ஆம் திகதி பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. வைரஸ் தொற்று உறுதியானது, இதனையடுத்து அவர் மாத்தளை, லக்கல பல்லேகம வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இதனையடுத்து 50 பேரிடம் பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மூவருக்கெ இன்று வைரஸ் தொற்று உறுதியானது. வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவரின் குடும்ப உறுப்பினர்களே இருவர்.

அதேவேளை, கம்பளை பகுதியில் இதுவரையில் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மலையக குருவியின் சிறப்புச் செய்தியாளர்

Related Articles

Latest Articles