கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட அட்டபாகை தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள பாரிய மரமொன்று இன்று முறிந்து விழுந்ததில் ஆட்டோவொன்று முற்றாக சேதமடைந்துள்ளது.

அனர்த்தம் இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே இரு சிறார்கள் ஆட்டோவில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் எவருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

எனினும், பாடசாலையை சூழவும், வரும் வழியிலும் முறிந்துவிழக்கூடிய அபாயத்தில் மரங்கள் இருப்பதாகவும், அவற்றை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அட்டபாகை தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
தகவல் – அட்டபாகை ராஜேஸ்
