கம்பளை, கோணடிக்கா தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் மீட்பு

கம்பளை, வெலம்பொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணடிக்கா மேல்பிரிவு தோட்டத்திலுள்ள காட்டு பகுதியில் இருந்து சிறுத்தையொன்றின் சடலம் இன்று (16) மீட்கப்பட்டுள்ளது.

3.5 அடி நீளமான குறித்த சிறுத்தை நான்கு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கக்கூடும் என வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுத்தை எவ்வாறு உயிரிழந்தது என்பது தொடர்பிலும் ஏனைய சில ஆய்வுகளுக்காகவும் சிறுத்தையின் உடல் கம்பளை மிருக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles