கம்பளை, தொலுவ பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் பலியாகியுள்ளனர்.
கம்பளை நகரில் இருந்து தொலுவ வழி ஊடாக குருகலை நோக்கி பயணித்த காரொன்று, பாதசாரிகள்மீது மோதியுள்ளது.
அதன்பின்னர் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிமீதும் மோதியுள்ளது.
கார் மோதியதால் தூக்கி வீசப்பட்ட இரு பெண்கள்மீது லொறியின் பின் டயரும் ஏறியுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பகுதியில் நின்றுக்கொண்டிருந்த மேலும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
காரை செலுத்திய பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர்கள் என தெரியவருகின்றது. விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றனர்.
க.யோகா