கரைவலை வாடி தீ வைப்பு – வள்ளம், வலை, இயந்திரபடகு தீக்கிரை!

உடப்பு ஆண்டிமுனை கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கரைவலை மீன் வாடியில் இனந்தெரியாத விசமிகளினால் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு பிற்பாடு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு மீன் வாடியில் தொழிலாளிகள் இருந்து விட்டு சென்ற பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

மேற்படி சம்பவத்தில், வள்ளம் 3, சாலை வலை 2, புறவலை 1, இயந்திரப்படகு 1, கரைவலை 1, மீன்பிடிக்கும் சல்வா 1, கம்மான் கயிறு 15 போன்றவை எரிந்து நாசமாகியுள்ளது. இதில் ஒரு வள்ளம் முற்றாகவே எரிந்ததோடு, இயந்திரப்படகு ஒன்று முற்றாகவே எரிந்துள்ளது.

இந்த சம்பவத்தில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட தமது சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டதாக வாடி உரிமையாளரின் மகன் செ.சொக்கலிங்கசாமி குறிப்பிட்டார்.

இது சம்பந்தமாக உடப்பு பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று (19) காலை உடப்பு பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றார்.

உடப்பில் இடம்பெற்ற தீ வைக்கப்பட்ட சம்பவங்களில் இது நான்காவது கரைவலை வாடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles