கலஹா, உடதெல்தோட்ட பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா!

கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட தெல்தோட்ட பகுதியில் யுதவியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் ஐந்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற புத்தகமொன்றை மீள கையளிப்பதற்காக கடந்த 5 ஆம் திகதி தனது வருங்கால கணவருடன் சென்றுள்ளார். அவ்வாறு சென்றுவந்த பின்னர் குறித்த யுவதிக்கு திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்.

9 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையொன்றில் மருந்து எடுத்துள்ளார், எனினும் தடிமன் குறையாததால் 13 ஆம் திகதி கலஹா பிரதேச வைத்தியசாலைக்குச்சென்றுள்ளார். அங்கு வழங்கப்பட்ட மருந்தாலும் நோய் குணமடையாததால் 20 ஆம் திகதி பேராதனை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதன்போது கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவரிடம் பீசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அம்முடிவு நேற்றிரவு ( 23.10.2020) வெளியானது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து குறித்த யுவதியின் வருங்கால கணவன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பழிகியவர்களையும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

அதேவேளை, கலஹா பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான தகவல்களை சுகாதார பரிசோதகர்கள் உரிய வகையில் வழங்குவதில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஊடகங்கள் வாயிலாகவேனும் தெரியவருவதற்கு ஊடகவியலாளர்களுக்கும் சரியான தகவலை வழங்க மறுக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

புபுரஸ்ஸ நிருபர்

Related Articles

Latest Articles