‘கல்விக்காக மலையேறும் மாணவர்கள்’ – பெற்றோர் போராட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமைக் காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டித்தும், கல்விக்காக தேசிய தொலைக்காட்சியொன்றில் முழு நேரத்தை ஒதுக்குமாறு கோரியும் பெற்றோர் , ஆசிரியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் பதுளை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (2021-06-28) நண்பகல் ஈடுபட்டனர்.

அதிகார வர்க்கத்தினர் சொகுசு வாழ்க்கையில், எமது பிள்ளைகள் கல்விக்காக மரங்களிலும், மலைகளிலும் ஏற வேண்டிய துர்ப்பாக்கிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உடனடியாக கல்விக்கு தேசிய தொலைகாட்சியொன்றை முழுமையாகப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும். ஒன்லைன் கல்வி அசாத்தியமற்ற நிலையில், மாணவர்கள் மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

எம். செல்வராஜா,பதுளை

Related Articles

Latest Articles