களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

கனியவள கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்ட 10,000 மெட்றிக் டன் எரிபொருள் தற்போது, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக முகாமையாளரும், ஊடக பேச்சாளருமான அன்ரு நவமணி தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றைய தினத்திற்குள் அந்த எரிபொருளை மின் உற்பத்தி நிலையத்தின் தாங்கியில் களஞ்சியப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவதாக 1,800 மெட்றிக் டன் எரிபொருளை களஞ்சியப்படுத்துவதற்கான பணிகள் நேற்றிரவு 11.30 அளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதனால், களனிதிஸ்ஸ வளாகத்தில் உள்ள இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் மீள இயங்கி வருகின்றன.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு மீள எரிபொருள் கிடைத்துள்ளதால், இன்றைய தினம் மின்சார துண்டிப்பு இடம்பெறாது என இலங்கை மின்சார சபையின் மேலதிக முகாமையாளரும், ஊடக பேச்சாளருமான அன்ரு நவமணி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தொடர்ச்சியாக எரிபொருள் கிடைக்காதவிடத்து மின்சார துண்டிப்பு இடம்பெறும் என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் உறுப்பினர் எரங்க குடாஹேவா தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles