கிறிஸ் கெய்ல் வயிற்று கோளாறில் இருந்து மீண்டு வந்துள்ளதால், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இந்த ஐபிஎல் தொடரும் பெரிதாக அமையவில்லை. 7 போட்டிகளிலும் ஆறில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.
நாளை மறுநாள் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. ஒருவேளை இந்த போட்டியில் தோல்வியடைந்தால் அந்த அணிக்கு பிளேஆப்ஸ் சுற்று வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் உள்ளார். அவர் இதுவரை களம் இறங்கவில்லை. வயிற்று கோளாறு காரணமாக ஓய்வில் இருந்தார். தற்போது அதில் இருந்து குணமடைந்து விட்டார். இதனால் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிராக விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, கிறிஸ் கெய்ல் எங்கள் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பவர் என்று கேஎல் ராகுல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.