காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் வேளையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தனது உறவினர்களுடன் நீராடசென்றிருந்த வேளையிலேயே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்.

காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த டயஸ் பெர்ணான்டோ கிளின்டன் எனும் 17 வயதுடைய மாணவர் ஒருவரே உயிரிழந்தவராவார்.

உடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

நிருபர்கள் – செதி பெருமாள், கௌசல்யா

Related Articles

Latest Articles