காசாவில் இடம்பெற்றுவரும் மோதல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இப்தார் மாதத்தில் நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட காசா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின், தலைவருமான செந்தில் தொண்டமான் 05 இலட்சம் ரூபா நிதியை வழங்கியுள்ளார்.
வர்த்தகர்கள், பொது அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்த நிதியத்துக்கு உதவிகளை வழங்கிவரும் நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முதல் அரசியல் தலைமையாக இந்நிதியை வழங்கியுள்ளார்.










