காசாவில் பஞ்சத்தால் குழந்தைகள் பரிதவிப்பு

கடந்த 8 மாதங்களில் இஸ்ரேலிய படைகளினால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் 67 சதவீத நீர் சுகாதார வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக UNRWA அமைப்பு தனது X தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு, சுகாதாரமின்மை மற்றும் நீரிழப்பு ஆகியவற்றின் தாக்கத்தினால் தொற்று நோய்கள் கட்டுக்கடங்காமல் பரவி, காசா வாழ் மக்களின் ஆரோக்கியத்தை அச்சுறுத்தி வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது எனவும் குறித்த அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

ஜூன் 9ந் திகதி UNRWA சுற்றுச்சூழல் அபாயம் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார அனர்த்தங்கள் பற்றி எச்சரித்திருந்தது.

இஸ்ரேலிய இராணுவம் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் மக்கள், சுமார் 330,000 தொன் கழிவுகளுடன் வாழ்ந்து வருவதாக கடந்த வியாழக்கிழமை UNRWA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“ குழந்தைகள் தினமும் குப்பையைக் கிளறிக் கொண்டு எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் அந்த அறிக்கை சுற்றுச் சூழல் மாசடைவைப் பற்றி வர்ணித்தது.

UNRWA பாலஸ்தீன அகதிகளுக்கான நிறுவனம் உடனடி போர்நிறுத்தத்திற்கான தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறது.

“ தடையின்றி மனிதாபிமான அணுகல் மற்றும் போர்நிறுத்தம் இப்போது மனிதாபிமான வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுக்க மிகவும் முக்கியமானது.” என்கிறது அது.

இதற்கிடையில், காசாவின் தெற்கில் உள்ள ரபாவின் மேயர் அஹ்மத் அல்-சௌபி, “ இஸ்ரேலின் தாக்குதலில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பொது வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகள் வருவதை தடுப்பதன் மூலமும் காசாவை குடியிருக்க முடியாத பகுதியாக மாற்ற இஸ்ரேல் முயல்கிறது ” என்றும் பாலஸ்தீனியப் பகுதியில் பஞ்சம் ஏற்படக்கூடும் என்றும் மேயர்கூறியுள்ளார்.

புதனன்று, இஸ்ரேலிய இராணுவ வானொலி, காசாவில் உள்ள பாலஸ்தீனியப் பகுதி இராணுவத்தால் அழிக்கப்பட்ட பின்னர், ரபா கடவை இனி பயன்படுத்த முடியாது என்று கூறியது,

பலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின்படி, 37,431 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 85,653 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், குறைந்தது 11,000 பேர் கணக்கில் வரவில்லை, அவர்கள் தங்கள் வீடுகளின் இடிபாடுகளுக்கு அடியில் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று பாலஸ்தீனிய மற்றும் சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன.

வடக்கு காசாவில் கடுமையான பஞ்சத்தினால் பெரும்பாலும் குழந்தைகள் இறந்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles